Last Updated : 11 Apr, 2021 03:15 AM

 

Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: ரசிகராக சென்று பதக்கம் வென்ற வீரர்

1896-ல் நடந்த முதலாவது ஒலிம்பிக்ஸில், ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை ஜான் பியஸ் போலண்ட் கைப்பற்றினார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், இங்கிலாந்துக்காக ஏப்ரல் 11, 1896-ல் இந்த தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜான் பியஸ் போலண்ட், டப்ளின் நகரில் பிறந்தவர். தனிப்பட்ட டியூஷன் மூலம் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர், பின்னர் பிர்மிங்காமில் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இதைத்தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்தார். ஜான் லூயிஸைப் பொறுத்தவரை, இளம் வயதில் அவருக்கு விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் இருந்ததில்லை. பொழுதுபோக்குக்காக டென்னிஸ் மட்டும் ஆடிவந்துள்ளார். இந்த சூழலில் அவர் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த காலத்தில், முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸில் நடக்கவுள்ளதாக கேள்விப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த ஒலிம்பிக் போட்டியை பார்ப்பதற்காக அவர் ஏதென்ஸ் நகருக்கு பயணமானார்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கிரேக்க தடகள வீரர் ஒருவருடன் இரவு உணவு உண்பதற்காக ஜான் லூயிஸ் சென்றுள்ளார். அவருடன் பேசும்போது, ஒலிம்பிக்கில் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்க போதுமான வீரர்கள் முன்வரவில்லை என்று கேள்விப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஒலிம்பிக்கில், டென்னிஸ் போட்டியில் தான் பங்கேற்றால் என்ன? என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

அதன்படி, ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் பங்கேற்க, இவர் பெயர் கொடுத்துள்ளார். தொழில்முறை டென்னிஸ் வீரர் இல்லை என்பதால், போட்டிகளின் போது அணிவதற்கான சரியான காலணிகள்கூட இவரிடம் இல்லை. இருப்பினும் இப்போட்டியில் அதிர்ஷ்டம் அவரது பக்கம் இருந்தது. ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

இதே டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ஜெர்மனி அணியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரருடன் இணைந்து விளையாடிய ஜான் லூயிஸ், இதிலும் தங்கப்பதக்கத்தை வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x