

2016ம் ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயம் பல்வேறு நாடுகளில் 21 சுற்றுகளாக கொண்டதாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம் உலகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பந்தயத்தில் மெர்சிடெஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 381 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவர் மொத்தம் 10 பந்தயங்களில் முதலிடம் பிடித்திருந்தார். இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயத்தின் போட்டி அட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது.
வழக்கமாக 19 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த பந்தயத்தில் இம்முறை 21 சுற்றுக்களாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. போட்டி விவரம்:
மார்ச் 20: மெல்போர்ன், ஏரப்ல் 3: பஹ்ரைன், ஏப்ரல் 17: ஷாங்காய், மே 1: சோச்சி, மே 15: பார்ஸிலோனா, மே 29: மோனாக்கோ, ஜூன் 12: கனடா, ஜூன் 19: அஸர்பைஜான், ஜூலை 3: ஆஸ்திரியா, ஜூலை 10: இங்கிலாந்து, ஜூலை 24: ஹங்கேரி, ஜூலை 31: ஜெர்மனி, ஆகஸ்ட் 28: பெல்ஜியம், செப்டம்பர் 4: இத்தாலி, செப்டம்பர் 18: சிங்கப்பூர், அக்டோபர் 2: மலேசியா, அக்.9: ஜப்பான், அக்.23: அமெரிக்கா, அக்.30: மெக்ஸிகோ, நவம்பர் 13: பிரேஸில், நவ.27: அபுதாபி.