டி 20 உலககோப்பை நடைபெறும் தர்மசாலா மைதானத்தில் ஐசிசி குழு ஆய்வு

டி 20 உலககோப்பை நடைபெறும் தர்மசாலா மைதானத்தில் ஐசிசி குழு ஆய்வு
Updated on
1 min read

டி 20 உலககோப்பை நடை பெறும் தர்மசாலா மைதானத்தில் ஐசிசி குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.

ஐசிசி டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, மும்பை, பெங்களூர், டெல்லி, நாக்பூர், மொகாலி, தர்மசாலா ஆகிய 7 மைதானங்களில் நடத்தப் படுகிறது.

இந்நிலையில் இந்த மைதானங்களை ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு ஆடுகளத்தின்தன்மை, மைதானத்தின் இருக்கை வசதிகள், பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நேற்று தர்மசாலா மைதானத்தில் ஆய்வு நடைபெற்றது. அப்போது ஐசிசி நிர்வாகிகள், இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர். இந்த மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மார்ச் 19ம் தேதி நடைபெறுகிறது. இதுதவிர மேலும் 7 ஆட்டங்களும் தர்மசாலாவில் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in