Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடக்கம்- முன்னேற்றம் காணுமா கொல்கத்தா?

ஐபிஎல் டி20 தொடரில் கடந்த சீசனில் தொடக்க ஜோடி, நடுவரிசை, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்ஆகியோர் கண்டறியப்பட்டிருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கொல்கத்தா அணி தடுமாற்றம் அடைந்தது. தொடரின் நடுப்பகுதியில் கேப்டன் மாற்றப்பட்டதும் பலன் கொடுக்கவில்லை.

ஆந்த்ரே ரஸ்ஸல் கடந்தசீசனில் பேட்டிங்கில் தடுமாறினார். அதேவேளையில் சுனில்நரேன் பந்து வீச்சு பாணி சர்ச்சைக்குள்ளானது. இவர்களின் பார்ம் ஒட்டுமொத்த அணியின் ஸ்திரத்தன்மையை பதம் பார்த்தது. விளைவு 2-வதுமுறையாக கொல்கத்தா அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.இந்த சீசனில் கொல்கத்தா அணிதனது முதல் ஆட்டத்தில் வரும்11-ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

பலம்: இங்கிலாந்தின் இயன்மோர்கன் இந்த சீசனில் முழுநேர கேப்டனாக செயல்படஉள்ளார். குறுகிய வடிவிலானபோட்டிகளில் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய மோர்கன் இம்முறை அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லக்கூடும். வங்கதேசத்தின் ஷிகிப்அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோருக்கு மாற்று வீரர்களாகஇருக்கக்கூடும். வேகப் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூஸிலாந்தின் லூக்கி பெர்குசன் ஆகியோருடன் இந்தியாவின் பிரஷித் கிருஷ்ணாவும் பலம் சேர்க்கக்கூடும்.

பலவீனம்; அணியின் சுழற்பந்து வீச்சு பலவீனமாக காணப்படுகிறது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் கடந்த சீசனில் 5 ஆட்டங்களில் ஒருவிக்கெட் மட்டுமே கைப்பற்றினார். சுனில் நரேன் பந்து வீச்சுபாணி விதிமுறைகளுக்கு மாறாகஇருப்பதாக கடந்த முறை புகார்எழுந்தது.மேலும் கடந்த சீசனில்17 விக்கெட்கள் வீழ்த்திய தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி இம்முறை உடற்தகுதி பிரச்சினையில் சிக்கி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x