Published : 20 Nov 2015 09:12 AM
Last Updated : 20 Nov 2015 09:12 AM

2016 யூரோ கால்பந்து தொடரில் பங்கேற்க கடைசி அணிகளாக தகுதிபெற்றது ஸ்வீடன், உக்ரைன் கோபன்ஹேகன்

2016 யூரோ கால்பந்து போட்டிக்கு கடைசி அணிகளாக ஸ்வீடன், உக்ரைன் அணிகள் தகுதி பெற்றன. இந்த இரு அணிகளும் பிளே ஆப் சுற்றில் முறையே டென்மார்க், ஸ்லோவேனியா அணிகளை வீழ்த்தின.

ஐரோப்பிய கால்பந்து கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 10ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெறுகிறது. இந்த போட்டி மினி உலககோப்பை கால்பந்து போட்டி என அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 24 அணிகள் மட்டும் இந்த தொடரில் கலந்து கொள்ளும். போட்டியை நடத்தும் பிரான்ஸ் நேரடியாக தகுதி பெற்றது.

இந்த தொடரில் கலந்து கொள் வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய கடந்த 17ம் தேதி யுடன் முடிவடைந்தது. இதில் 53 அணிகள் கலந்து கொண்டன. இத் தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ருமே னியா, இங்கிலாந்து, செக்.குடி யரசு, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, வட அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்லோவேக்கியா, குரோ ஷியா, துருக்கி ஆகிய 20 அணிகள் தகுதி சுற்று ஆட்டங்களில் தங்க ளது பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்து 2016 யூரோ கால்பந்து தொட ரில் விளையாட தகுதி பெற்றன.

பிளே-ஆப் சுற்று

மீதம் உள்ள 4 இடங்களுக்கான அணியை தேர்வு செய்வதற்காக பிளே-ஆப் சுற்றுகள் நடத்தப்பட் டது. இதில் தகுதி சுற்றில் ஒவ் வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடித்த ஹங்கேரி, அயர்லாந்து, ஸ்வீடன், உக்ரைன், போஸ்னியா, நார்வே, டென்மார்க், ஸ்லோவே னியா ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன. இந்த 8 அணிகளும் 4 ஜோடிகளாக பிரிக்கப்பட்டது. இந்த இணைகளுக்குள் 2 ஆட்டங்கள் நடத்தப்பட்டு அதில் அதிக கோல்கள் அடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 12 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற்ற இரு ஆட்டங்களில் ஹங்கேரி 3-1 (இரு ஆட்டங்களிலும் அடிக்கப்பட்ட கோல்கள்) என்ற கணக்கில் நார்வே அணியை தோற் கடித்து பிராதன சுற்றுக்கு முன்னேறி யது. 13 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற்ற ஆட்டங்களில் அயர் லாந்து 3-1 என்ற கோல்கள் கணக் கில் போஸ்னியாவை வீழ்த்திய பிரதான சுற்றில் நுழைந்தது.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றின் கடைசி ஆட்டங்களில் ஸ்வீடன்- டென்மார்க் அணிகள் கோபன் ஹேகன் நகரிலும், உக்ரைன்-ஸ்லோவேனியா அணிகள் துருக்கி யிலும் மோதின. இதில் ஸ்வீடன்-டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஸ்வீடன் அணி தரப்பில் அந்த அணி கேப் டன் இப்ராகிமோவிக் 2 கோல்கள் அடித்தார். முதல் ஆட்டத்தில் ஸ்வீ டன் 2-1 என டென்மார்க்கை வீழ்த்தி யது. இதனால் 4-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஸ்வீடன் அணி பிரதான சுற்றில் கால் பதித்தது. உக்ரைன்-ஸ்லோ வேனியா மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. உக்ரைன் முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

2016 யூரோ கால்பந்தில் பங்கேற்கும் அணிகள்

பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ருமேனியா, இங்கிலாந்து, செக்.குடியரசு, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, வட அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்விட்ஸர்லாந்து, அல்பேனியா, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்லோவே கியா, குரோஷியா, துருக்கி, ஹங்கேரி, ஸ்வீடன், உக்ரைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x