

கரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற உள்ளன.
இந்நிலையில் கரோனா தொற்றால் ஏற்பட்ட உலக பொது சுகாதார நெருக்கடியிலிருந்து வீரர்களைப் பாதுகாக்கும் வகையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவதில்லை என வடகொரியா முடிவு எடுத்துள்ளது.
வடகொரியா ஒலிம்பிக் கமிட்டி தனது குழு உறுப்பினர்கள், விளையாட்டு அதிகாரிகளுடன் கடந்த மாதம் 25-ல் பியோங்யாங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது. வீரர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
வடகொரியா கடந்த 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியையும், 1988-ல் சியோல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கிக் போட்டியையும் வட கொரியா புறக்கணித்திருந்தது.