Published : 05 Apr 2021 03:14 am

Updated : 05 Apr 2021 05:53 am

 

Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 05:53 AM

ஐபிஎல் தொடருக்கு இன்னும் 4 நாட்கள்... மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ

chennai-super-kings

சென்னை

சுரேஷ் ரெய்னாவின் வருகை பேட்டிங் துறையை வலுப்படுத்தக்கூடும். ஆனால் சுழல்சார்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கடந்த சீசனில் இருந்து மீண்டு வரும் முயற்சியாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் தங்களை தக வமைத்து கொள்ள வேண்டும்.

3 முறை சாம்பியனான சிஎஸ்கே கடந்த சீசனில் மோசமாக விளையாடியது. ஐபிஎல் வரலாற்றில் முதன் முறை யாக அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் 7வது இடத்தையே பிடித்தது. தோனி தலைமையிலான சிஎஸ்கே இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் வரும் 10-ம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


சிஎஸ்கேவின் பலமேஅனுபவ வீரர்கள்தான். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் இந்த அனுபவம் சிறந்த பலனை கொடுத்து வந்துள்ளது. உத்வேகம் அளிக்கும் தோனியின் தலைமைப்பண்பு மற்றொரு சாதகமான விஷயம். சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்பியிருப்பது பேட்டிங் குழுவின் ஸ்திரத்தன்மையை வலுவடையச் செய்யக்கூடும்.

ரெய்னா, டு பிளெஸ்ஸிஸ், தோனி, அம்பதி ராயுடு, ரவீந்திரஜடேஜா, சேம் கரண், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மொயின் அலி, வேகமாக முன்னேறி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் எதிரணியின் பந்து வீச்சை சிதை வுக்கு உட்படுத்தி பெரியஸ்கோரை குவிக்கும் தன்மை கொண்டவர்கள். லுங்கி நிகிடி, ஷர்துல் தாக்கர்,சேம் கரண், தீபக் ஷாகர் எனஎதிரணியின் பேட்டிங் வரி சைக்கு சவால் கொடுக்க கூடிய பந்துவீச்சு குழு உள்ளது.

பலவீனம்

வயதான வீரர்களை அதிகம் உள்ளடக்கிய சிஎஸ்கேஅணி கடந்த சீசனில் ஒட்டுமொத்தமாக படுமோசமாக விளையாடியது. வேகமாக டி 20 அரங்கில் சீனியர் நட்சத்திர வீரர்கள் தங்களது திறனைநிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, இம்ரன் தகிர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்கள் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாததால் போதிய அளவிலான பயிற்சி இல்லாதது அணியின் திறனை பாதிக்கக்கூடும். மேலும் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைக்கும் திறன் தோனியிடம் கடந்த சீசனில் குன்றியது.

வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் திடீரென விலகியுள்ளது பந்து வீச்சு துறையில் சற்று பலவீனத்தை உருவாக்கக்கூடும். மேலும் சர்வதேச போட்டிகள் காரணமாக சில வீரர்கள் தாமதமாகவே அணியுடன் இணைய உள்ளனர். காயத்தில் இருந்துமீண்டுள்ள ஜடேஜா நீண்டகாலத்துக்கு பிறகு களமிறங்கு வதால் அவரது செயல் திறன் முழுமையாக வெளிப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோவின் காயமும் சிஎஸ்கே அணியை கவலையடைச் செய்துள்ளது.

இந்த சீசனில் அனைத்து ஆட்டங்களும் பொதுவான மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சை சார்ந்திருக்கும் சிஎஸ்கே அணியானது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மும்பை போன்ற ஆடுகளங் களுக்கு தகுந்தவாறு திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

சுழற்பந்து வீச்சில் அனுபவம் மற்றும் திறன் வாய்ந்த வீரர்கள் அணியில் உள்ளனர். எனினும் வீரர்கள் தேர்வில் சரியான கலவையை கண்டறிய வேண்டும். ஏனெனில்கடந்த சீசனில் பெரும்பாலான ஆட்டங்களில் இம்ரன் தகிர் வெளியே அமரவைக்கப்பட்டி ருந்தார்.

அணிவிவரம்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ்ரெய்னா, அம்பதி ராயுடு, கே.எம்.ஆசிப், தீபக் ஷாகர், டுவைன் பிராவோ, டு பிளெஸ்ஸிஸ், இம்ரன் தகிர், என்.ஜெகதீசன், கரண் சர்மா, லுங்கி நிகிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்குர், சேம் கரண், சாய் கிஷோர், மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், சேதேஷ்வர் புஜாரா, ஹரி சங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிஷாந்த்.ஐபிஎல்சென்னை சூப்பர் கிங்ஸChennai super kings

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x