இதை மட்டும் மறந்துவிடக் கூடாது: ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த 5 நட்சத்திர பேட்ஸ்மேன்கள் யார்?

விராட் கோலி: கோப்புப் படம்.
விராட் கோலி: கோப்புப் படம்.
Updated on
2 min read

ஐபிஎல் டி20 தொடர் என்றாலே பேட்ஸ்மேன்களின் அதிரடியான பேட்டிங், பரபரப்பான முடிவுகள், திருப்பங்களுடன் கூடிய முடிவுகள், அனல் பறக்கும் பந்துவீச்சு என சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது.

அதே பரபரப்புடன் 14-வது ஐபிஎல் சீசன் வரும் 9-ம் தேதி தொடங்க இருக்கிறது. 8 அணிகளும் ஒவ்வொரு ஆட்டத்தையும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கவே முயல்வார்கள். ஒவ்வொரு தொடரிலும் அதிகமான ரன்கள் அடித்தவர்கள், அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி, பர்ப்பிள் தொப்பியை யார் வெல்வது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் இந்த ஆண்டு சீசனிலும் கலக்க வாய்ப்புள்ளது.

ரன் மெஷின் விராட் கோலி

ஆர்சிபி அணியின் கேப்டன், ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, ஒவ்வொரு தொடரிலும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்து வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 184 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 5,878 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 38 ரன்கள் சேர்த்துள்ள கோலி, 130.73 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கடந்த 6 முதல் 7 சீசன்களில் அதிகமான ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி இருந்து வருகிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 5 சதங்களை கோலி அடித்துள்ளார்.

சின்ன தல சுரேஷ் ரெய்னா

ரசிகர்களால் சின்ன தல என்று அழைக்கப்படுபவர் சிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா. கடந்த தொடரில் ரெய்னா விளையாடாதது சிஎஸ்கே அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்தது. இதுவரை ரெய்னா ஐபிஎல் தொடரில் 5,368 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 33.34 வைத்துள்ளார்.

"விரட்டல்" டேவிட் வார்னர்

2009-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், இதுவரை ஐபிஎல் தொடரில் 5,354 ரன்கள் குவித்துள்ள வார்னர், 42.71 சராசரி வைத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்துவரும் வார்னர், 2-வது முறையாக அணிக்குக் கோப்பையை வெல்ல அணியை இந்த ஆண்டு முன்னெடுக்கிறார்.

"ஹிட் மேன்" ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது அணிக்கு 5-வது கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா 195 இன்னிங்ஸ்களில் 5,230 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 39 அரை சதங்கள், ஒரு சதம் அடங்கும்.

ஷிகர் தவண்

ஒவ்வொரு ஆண்டும் மிகவும் கவனிக்கப்படக்கூடிய அதிரடி ஆட்டக்கார்ர ஷிகர் தவண். இதுவரை 41 அரை சதங்கள் 2 சதங்களை ஷிகர் தவண் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சராசரியாக 34 ரன்கள் வைத்துள்ளார். மொத்தமாக 5,197 ரன்களை ஷிகர் தவண் குவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in