Published : 03 Apr 2021 08:51 AM
Last Updated : 03 Apr 2021 08:51 AM

மும்பை வான்ஹடே மைதானப் பணியாளர்கள் 8 பேருக்கு கரோனா: ஐபிஎல் போட்டிகள் இடம் மாற்றப்படுமா?

மும்பை வான்ஹடே மைாதனம்: கோப்புப்படம்

மும்பை

ஐபிஎல் டி20 தொடர் தொடங்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மும்பை வான்ஹடே மைதானப் பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை வான்ஹடே மைதானத்தில்தான் சிஎஸ்கே அணி நடக்கும் ஆட்டங்கள் அனைத்தும் நடக்கின்றன. ஏப்ரல் 10ம் தேதி முத் 25ம் தேதி வரை 10 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மைதான ஊழியர்களுக்கு கரோனா இருப்பது விளையாடும் வீரர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும்.

கடந்த வாரம் மைதானப் பராமரிப்பில் உள்ள 19 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது, அடுத்தகட்ட பரிசோதனை முடிவு நேற்று வெளியானதில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு கரோனா இல்லை என்றாலும்அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் டி20 தொடர் சென்னையில் தொடங்க இருக்கும் நிலையில், மைதான ஊழியர்களுக்கு கரோனா ஏற்பட்டுள்ளது வீரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் மும்பையில் நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள சரத்பவார் அகாடெமி, காண்டிவாலியில் உள்ள சச்சின் டெண்டுல்கர் ஜிம்கானா ஆகியவற்றில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மும்பையில் நடக்க இருக்கும் ஐபிஎல் ஆட்டங்களை வேறு நகருக்கு மாற்ற பிசிசிஐ யோசிக்குமா என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x