Published : 15 Nov 2015 12:35 PM
Last Updated : 15 Nov 2015 12:35 PM

வார்னர் 253 ரன்னில் ஆட்டமிழந்தார்: ஆஸ்திரேலியா 559 ரன்னில் டிக்ளேர்

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப் புக்கு 416 ரன்கள் குவித்தது. வார்னர் இரட்டை சதம் விளாசினார். உஸ்மான் ஹவாஜா 121 ரன் எடுத் தார். நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

வார்னர் 244, ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்னுடன் தொடர்ந்து விளையாடி னர். வார்னர் மேற்கொண்டு 9 ரன்கள் சேர்த்த நிலையில் பவுல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னர் 258 நிமிடங்கள் களத்தில் நின்று 186 பந்தில், 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 253 ரன் எடுத் தார். ஸ்டீவ் சுமித் 27, வோஜஸ் 41, மார்ஷ் 34, நேவில் 19, ஸ்டார்க் 0, ஜாண்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். 133 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 559 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை டிக் ளேர் செய்தது. ஹசல்வுட் 8, நாதன் லியான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸி. தரப்பில் மார்க் கிரெய்க் 3 விக்கெட் வீழ்த்தினார். பவுல்ட், ஹென்றி, பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதை யடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 42 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. குப்தில் 1, லதாம் 36 ரன்களில் வெளியேறினர். வில்லி யம்சன் 70, ராஸ் டெய்லர் 26 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்க நியூஸிலாந்து அணி 419 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x