டபிள்யூடிஏ பைனல்ஸ்: சானியா - ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

டபிள்யூடிஏ பைனல்ஸ்: சானியா - ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
Updated on
1 min read

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் சாம் பியன்ஷிப் போட்டியில் இரட்டையர்களுக்கான பிரிவில் சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

டபிள்யூடிஏ பைனல்ஸ் என்று அழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இதில் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, ஸ்பெயின் நாட்டின் கார்பைன் முகுருசா - சுவாரெஸ் நவரோவா ஜோடி யை எதிர்த்து ஆடியது. 66 நிமிடங்களில் முடிந்த இப் போட்டியில் சானியா மிர்சா -ஹிங்கிஸ் ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட்டுகளில் மிக எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட் டத்தை கைப்பற்றியது.

இது சானியா மிர்சா -ஹிங்கிஸ் ஜோடி கைப்பற்றும் 9-வது இரட்டையர் டென்னிஸ் சாம்பியன் பட்டமாகும்.

அத்துடன் கடந்த 22 ஆட்டங்களாக ஒரு போட்டியில் கூட தோற்காத ஜோடி என்ற சாதனையையும் இவர்கள் படைத்தனர்.

இந்த வெற்றியைக் குறித்து நிருபர்களிடம் பேசிய மார்ட்டினா ஹிங்கிஸ், “இது ஒரு மிகச் சிறந்த நாளாக இருந்தது. சானியா மிர்சா மிகச்சிறப்பாக ஆடினார்” என்றார். ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் செக் நாட்டைச் சேர்ந்த பெட்ரா க்விடோவாவை 6-2, 4-6, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்றார். ரத்வன்ஸ்கா வெல்லும் முதலாவது டபிள்யூடிஏ டென்னிஸ் சாம்பியன் பட்டம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in