

7-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கொல்கட்டா நைட் ரைடர்ஸ் கைப்பற்றிய பிறகு, ஆடம்பர விழாவைக் கொண்டாடிய அணி உரிமையாளரான பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் புத்தரிடம் சரணடைந்துள்ளார்.
"கவுதம புத்தர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் சிலவற்றை வாங்கியுள்ளேன், அதனைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன், ஏனெனில் என் மனது அப்போதுதான் சாந்தியடையும்" என்று ட்வீட் செய்துள்ளார் ஷாரூக்.
ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்து கொண்ட ஆடம்பரமான விழாவில் ஷாரூக் கான் காற்றில் முத்தங்களை வீசியபடியே, ஓயாத நடனத்திலும் ஈடுபட்டு சுமார் ஒரு லட்சம் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
மைதானத்திற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் கூடிவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தன் மீது இவ்வளவு அன்பு கொண்ட ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு திரும்பக் கொடுக்க தன்னிடம் நீண்டகாலத்திற்கானத் திறமைகள் உள்ளது என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஷாரூக்.