2016 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை

2016 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: ஸ்ரீகாந்த் நம்பிக்கை
Updated on
1 min read

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், “இந்தியாவில் டி20 உலகக் கோப்பை ஒரு மிகப்பெரிய நிகழ்வு. டி20 கிரிக்கெட்டில் இந்தியா நன்றாக விளையாடி வருகிறது. எனவே இம்முறையும் இந்தியா நன்றாகவே விளையாடும், யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்தியா கோப்பையையும் வென்று விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார்.

டெஸ்ட் வெற்றி குறித்து...

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தினோம். 2-வது டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கவில்லையெனில் அதிலும் வெற்றி பெற்றிருப்போம்.

தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணியை வீழ்த்தினால் அணியின் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும்.

2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா வலுவான நிலையில் இருந்த்து. 3 நாட்கள் டெஸ்ட் போட்டி நடைபெற்றிருந்தால் கூட இந்தியாவுக்குச் சாதகமாக முடிவு ஏற்பட்டிருக்கும். மழை அனைத்தையும் நாசமாக்கி விட்டது.

அணியில் நிறைய இளம் வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர், இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறி. நிச்சயமாக, இந்திய அணி சரியான திசையில் பயணிப்பதாகவே நான் கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் ஸ்ரீகாந்த்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in