முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு: சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகள் நவம்பர் 23ல் தொடக்கம் - மார்ட்டினா ஹிங்கிஸ், பிளவியா பென்னட்டா பங்கேற்பு

முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு: சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகள் நவம்பர் 23ல் தொடக்கம் - மார்ட்டினா ஹிங்கிஸ், பிளவியா பென்னட்டா பங்கேற்பு
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகள் நவ.23ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. ஐபிஎல் தொடரை போன்று இதில் 6 அணிகள் கலந்துகொள்கின்றன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் போட்டிகளை கடந்த ஆண்டு முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் நடத்தினார். இதன் தொடர்ச்சியாக 2வது சீசன் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக விஜய் அமிர்தராஜ் அளித்த பேட்டி:

இந்த தொடரில் மார்ட்டினா ஹிங்கிஸ், பிளவியா பென்னட்டா, ஜெலீனா ஜன்கோவிக், தாமஸ் ஜாண்சன் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 23ம் தேதி மும்பையில் போட்டிகள் தொடங்குகிறது. இறுதி போட்டியையும் சேர்த்து மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறும். இறுதி போட்டி டிசம்பர் 6ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் பஞ்சாப் மார்ஷல்ஸ், மும்பை டென்னிஸ் மாஸ்டர்ஸ், ராய்ப்பூர் ரேஞ்சர்ஸ், நாக்பூர் ஆரஞ்சர்ஸ், ஐதராபாத் ஏசஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதலிடங்களை பெறும் அணிகள் பட்டம் வெல்வதற்கான இறுதி போட்டியில் மோதும். முதலிடத்தை பெறும் அணிக்கு ரூ.1 கோடியும், 2வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும்

ஒவ்வொரு அணியிலும் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் ஜூனியர் வீரர்கள் இருவர் இடம் பெற உள்ளனர். ஐதராபாத் அணியில் மார்ட்டினா ஹிங்கிஸ், கர்லோவிக், தாமஸ் ஜாண்சன், ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் ஜூனியர்களான ஷத்விகா ஷமா, அடில் கல்யான்பூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in