

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸியை அந்த அணியின் கேப்டன் தோனி அறிமுகம் செய்து வைத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், ஏப்ரல் 9-ம் தேதி தொடங்க உள்ளது.
14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 6 நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
ஐபிஎல் போட்டிக்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் பயிற்சியைத் தொடங்கிவிட்டன. இந்த முறை கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்தியாவில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி தலைவர் தோனி அவ்வணியின் புதிய ஜெர்ஸியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. தங்களது முதல் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியுடன் மோதுகிறது.