Published : 24 Mar 2021 03:13 am

Updated : 24 Mar 2021 06:18 am

 

Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 06:18 AM

விளையாட்டாய் சில கதைகள்: கரோனாவால் தள்ளிப்போன ஒலிம்பிக்ஸ்

sports-story

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி தொடங்குவதாக இருந்த ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்த நாள் இன்று (மார்ச் 24).

2020-ல் கரோனாவின் கோரப் பிடியில் உலகம் சிக்கத் தொடங்கிய நிலையில் விளையாட்டு ரசிகர்கள் மனதில் இருந்த முக்கிய கேள்வி, ஒலிம்பிக் போட்டி நடக்குமா, நடக்காதா? என்பதுதான். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியை நடத்த, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மைதானங்களை அமைத்திருந்தது ஜப்பான். போட்டியை காண உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு வசதியாக அதிவேக ரயில்கள், தங்கும் விடுதிகள் போன்றவையும் வேகமாக தயாராகின. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு டோக்கியோவை தயார்படுத்த 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தது ஜப்பான். ஆனால் கரோனாவால் எல்லாம் தலைகீழானது.


கரோனா அச்சத்தால் தங்கள் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா முதலில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து மேலும் சில நாடுகள் இதே நிலையைக் கடைபிடித்தது. இந்நிலையில் மார்ச் 24-ம் தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் அபே, “ஒலிம்பிக் போட்டிகளை எப்போது வேண்டுமானாலும் நடத்த நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் வீரர்களின் நலன், மற்ற நாடுகளின் கோரிக்கை ஆகியவற்றால் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைப்பது தவிர்க்க முடியாத விஷயமாகி வருகிறது” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. வரும் ஜூலை மாதம் 21-ம் தேதி ஒலிம்பிக் போட்டியைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஜப்பான் தற்போது ஈடுபட்டுள்ளது. அதே நேரம் கரோனா அச்சம் விலகாததால், வெளிநாட்டுப் பார்வையாளர்களை இந்த ஒலிம்பிக் போட்டிக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



கரோனாவால் தள்ளிப்போன ஒலிம்பிக்ஸ்விளையாட்டாய் சில கதைகள்Sports story

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x