அர்ஜெண்டீன ஹாக்கி வீர்ர்கள் சென்ற பஸ் மீது கல்வீசித் தாக்குதல்: 3 பேர் கைது

அர்ஜெண்டீன ஹாக்கி வீர்ர்கள் சென்ற பஸ் மீது கல்வீசித் தாக்குதல்: 3 பேர் கைது
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் அர்ஜெண்டீன சர்வதேச ஹாக்கி அணியினர் சென்ற பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜ்நாராயண் திவாரி (31), மேகேஷ் சாஹு (24), கோவிந்த் சாஹு (26) ஆகியோரை சத்தீஸ்கர் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

வெள்ளிக்கிழமையன்று, இந்திய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டீனா வீழ்த்தியது. இதனையடுத்து மைதானத்திலிருந்து அர்ஜெண்டீன ஹாக்கி வீரர்கள் பேருந்தில் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர், அப்போது பட்டகான் பகுதியில் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், குழந்தை ஒன்று தெரு விலங்கு மீது விட்டெறிந்த கல் தெரியாமல் பேருந்தில் பட்டு கண்ணாடி உடைந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால், மேலும் விசாரணை செய்ததில், கைது செய்யப்பட்ட 3 பேரும் பயங்கர மது போதையில், பசு ஒன்றின் மீது கல் வீசி தாக்கியதாகவும், அதில் கல் ஒன்று பசுவின் மீது பட்டுத் தெறித்து பேருந்தின் கண்ணாடியைப் பதம் பார்த்ததாகவும் ஐ.ஜி. ஜி.பி.சிங் தெரிவித்தார். ஆனால் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்திஸ்கர் தலைநகர் ராய்பூரில் உலக ஹாக்கி லீக் தொடர் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 6-ம் தேதி வரை இது நடைபெறுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in