ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கியில் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கியில் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு
Updated on
1 min read

ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி யில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு பரிசுத்தொகையை அறி வித்துள்ளது. அணியில் உள்ள வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்து.

மலேசியாவில் நடைபெற்ற 8வது ஆசியக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டி யில் இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்நிலை யில் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப் படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

இதுதவிர இந்த தொடரில் 15 கோல்கள் அடித்த ஹர்மான் பிரீத்சிங் மற்றும் சிறந்த கோல் கீப்பராக தேர்வு செய்யப்பட்ட விகாஸ் தாகியா ஆகியோருக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளருக்கு ரூ.1 லட்சமும், அவருக்கு உறுதுணையாக இருந்து ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பரிசுத்தொகை அறி விக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் துருவ் பத்ரா கூறும்போது, "இந்திய அணி கோப்பையை வென்றது பெருமையாக உள்ளது. கடுமையாக உழைத்த வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் அவ ருக்கு துணையாக இருந்த ஊழியர் களுக்கும் வாழ்த்துக்களை தெரி வித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி அணியின் தன்னம் பிக்கையை அதிகரித்துள்ளது" என்றார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in