

இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் (ஹாக்கி இந்தியா) தென் மண்டல விளையாட்டு மேலாளரும், முன்னாள் பயிற்சியாளருமான பி.ஜே.கரியப்பா, தமிழகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு வீரர்களின் திறன்களை ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, ஹாக்கி இந்தியா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பு மூலமாக உதகை, குன்னூரில் ஹாக்கி வீரர்களின் திறன்களை ஆய்வு செய்து வருகிறார். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:
சீனியர் மற்றும் ஜூனியர் ஹாக்கி அணிகள் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றன. வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பெங்களூருவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முதல் ஐந்து இடங்களுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்துக்கு பின்னர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மகளிர் அணியினர் தகுதி பெற்றுள்ளனர். பயிற்சிகளை பொறுத்து, அவர்களின் செயல் பாடுகள் இருக்கும்.