Published : 17 Mar 2021 16:09 pm

Updated : 17 Mar 2021 16:09 pm

 

Published : 17 Mar 2021 04:09 PM
Last Updated : 17 Mar 2021 04:09 PM

விராட் கோலி ஒருவர் மட்டுமே: ஒருநாள், டி20, டெஸ்ட் தரவரிசை அனைத்திலும் டாப் 5  இடம் பிடித்த ஒரே வீரர்

icc-rankings-virat-kohli-rises-to-5th-in-t20i-list-only-batsman-in-top-5-across-formats
விராட் கோலி: கோப்புப் படம்.

துபாய்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் மற்றும் டி20 போட்டித் தரவரிசையில் 5-வது இடம் என முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கோலி 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் 73, 77 ரன்கள் எடுத்து 47 புள்ளிகளுடன் மீண்டும் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 5 இடங்கள் நகர்ந்து, 19-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2018-ம் ஆண்டு கடைசியாக 17-வது இடத்தை அடைந்ததுதான் பட்லரின் சிறப்பான தரவரிசையாகும்.

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 32 இடங்கள் நகர்ந்து 31-வது இடத்துக்கும், ரிஷப் பந்த் 80-வது இடத்துக்கும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 11-வதுஇடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 14 இடங்கள் நகர்ந்து 27-வது இடத்தையும், புவனேஷ்வர் குமார் 7 இடங்கள் நகர்ந்து 45-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ 3-வது டி20 போட்டியில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இரு இடங்கள் நகர்ந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 43 இடங்கள் முன்னேறி 34-வது இடத்துக்கும், மார்க் உட் 59 இடங்கள் நகர்ந்து 39-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். சாம் கரன் 74-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தவறவிடாதீர்!



ICC RankingsVirat Kohli5th in T20I listOnly batsman in top 5விராட் கோலிஐசிசி ரேட்டிங்ஒருநாள் டி20 டெஸ்ட் அனைத்திலும் கோலி மட்டுமேஇங்கிலாந்து அணி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x