

அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் இருக்கின்றன.
3-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் இடம் பெறாமல் இருந்த மார்க் உட் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார், டாம் கரன் நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அணிக்குத் திரும்பியுள்ளார், சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே களமிறங்கிய சூர்யகுமார் யாதவுகுக்கு பேட்டிங் வாய்ப்பு அளிக்காமலேயே நீக்கப்பட்டுள்ளார்.
ஆடுகளம் எப்படி?
3-வது டி20 போட்டி நடக்கும் ஆடுகளம் செம்மண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளமாகும். இந்தஆடுகளத்தில் பந்துகள் நன்றாக சுழலும், ஸ்விங் ஆகும். இந்த ஆடுகளத்தில் சராசரியாக 170 ரன்கள் வரைஅடிக்க முடியும். சுழற்பந்துவீ்ச்சுக்கு சாதகமான ஆடுகளம், பந்து மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும் என்பதால் முதலில் பந்துவீசும் அணி, எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தலாம், ஆஃப் சைட் பவுண்டரி தொலைவாக இருப்பதால், அந்தப்பகுதியில் பவுண்டரி அடிப்பது கடினமாகஇருக்கும், லெக் திசையில் எளிதாக அடிக்க முடியும். முதலில் பேட் செய்யும் இந்திய அணி மிகவும் நிதானமாக ஆட வேண்டும்.