

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணி களுக்கு இடையிலான 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 5-ம் தேதி பஞ்சாப் மாநிலத் தில் உள்ள மொகாலி ஐ.எஸ். பிந்த்ரா பி.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் விளையாடு வதற்காக இரண்டு அணிகளும் நேற்று மொகாலி சென்றடைந்தனர். இந்நிலையில் மொகாலி ஆடு களம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மொகாலி ஆடுகளத்தில் புற்கள் வளர்ந்து பச்சை பசேல் என்று காட்சியளிக்கிறது. புற்கள் அதிகம் இருந்தால் ஆடுகளம் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கோலி ஆகி யோர் இன்று ஆடுகளத்தைப் பார் வையிடுவார்கள் என தெரிகிறது. அதன்பின் அவர்கள் கோரிக்கை வைத்தால் ஆடுகளத்தின் புற்கள் சிறிதளவு வெட்டப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆடுகளம் தயாரிக்கப்பட்டது குறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்க பொதுச் செயலாளர் பாண்டோவ் கூறும்போது, மொகாலி டெஸ்ட் போட்டிக்கு சிறந்த ஆடுகளத்தை வழங்க இருக்கிறோம். இந்த ஆடுகளம் வேகப்பந்து, சுழற்பந்து, பேட்டிங் ஆகியவற்றுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கும்.
ஆடுகளம் வழக்கமாகவே முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் மூன்றாவது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். ஆடுகளம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து எந்தவொரு வேண்டு கோளும் இதுவரை வரவில்லை" என்று தெரிவித்தார்.