டோக்கியோ ஒலிம்பிக் பவானிதேவி தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் பவானிதேவி தகுதி
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவி தகுதி பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானிதேவி, அண்மையில் ஹங்கேரியில் நடைபெற்ற உலககோப்பை வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்று கால் இறுதியில் தோல்வி கண்டார். இருந்தபோதும் சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின்படி (ஏஓஆர்) அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கதகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in