

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் 1997-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.
10-ம் தேதிவரை நடைபெறவுள்ள இப்போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரும் சென்னை ஓபனின் நடப்பு சாம்பியனுமான வாவ்ரின்கா, கெவின் ஆன்டர்சன், கில்ஸ் முல்லர், போர்னா கோரிக் உட்பட பல முன்னணி வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். போட்டியின் இயக்குநரான டாம் ஆன்னியர் சென்னையில் நிருபர்களிடம் இதை தெரிவித்தார்.