இன்று 2-வது டி 20 ஆட்டம்: பதிலடி கொடுக்குமா இந்தியா?

இன்று 2-வது டி 20 ஆட்டம்: பதிலடி கொடுக்குமா இந்தியா?
Updated on
1 min read

இந்தியா–இங்கிலாந்து இடை யிலான 2-வது டி 20 போட்டி அக மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத் தில் இந்தியாவை வீழ்த்தியிருந் தது. இந்நிலையில் 2-வது ஆட்டத் தில் இரு அணிகளும் இன்று மோது கின்றன. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் தரநிலைக்கு தகுந்த வாறு அமையவில்லை.

கே.எல்.ராகுல், ஷிகர் தவண், விராட் கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த தவறிய தால் நடுவரிசை வீரர்கள் அழுத் தத்தை சந்தித்தனர். ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டையை சுழற்றிய போதிலும் களத்தில் நிலைபெற்று விளையாடும் திறன் இல்லாமல் போனது.

இங்கிலாந்து பந்து வீச்சை ஸ்ரேயஸ் ஐயர் மட்டுமே சமயோஜிதமாக எதிர்கொண்டு விளையாடினார். அவர், 67 ரன்கள் சேர்த்த போதிலும் வலுவான இலக்கை கொடுக்க போதுமானதாக அமையவில்லை. இதனால் பேட்டிங்கை வலுப்படுத் தும் விதமாக இன்றைய ஆட்டத் தில் சூர்யகுமார் யாதவ் கள மிறக்கப்படக்கூடும். மேலும் ரோஹித் சர்மாவை களமிறக்குவது குறித்தும் அணி நிர்வாகம் சிந்திக்கக்கூடும்.

பந்து வீச்சிலும் இந்திய அணியில் தேக்கம் காணப்பட்டது. இங்கிலாந்து வேகப் பந்து வீச் சாளர்கள் 140 கி.மீ. வேகத்தில் சீராக பந்து வீசிய நிலையில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர் ஆகியோர் 130 கி.மீ. வேகத்திலேயே வீசினர். மேலும் பந்துகளும் அதிக அளவில் ஸ்விங் ஆகவில்லை. இதனால் பந்து வீச்சிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. தீபக் ஷகார் அல்லது நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். அதேபோன்று ராகுல் டிவாட்டி யாவும் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in