Last Updated : 14 Mar, 2021 03:14 AM

 

Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: அமெரிக்காவின் தங்க மங்கை

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ரஷ்யா, ருமேனியா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்திய காலம் இருந்தது. அதை முறியடித்து, அமெரிக்கர்களாலும் ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த சைமன் பைல்ஸின் பிறந்தநாள் இன்று (மார்ச் 14).

1997-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சைமன் பைல்ஸ் பிறந்தார். சைமன் பைல்ஸின் தாயார் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதனால் சைமன் பைல்ஸையும் அவருடன் பிறந்த மற்ற 2 குழந்தைகளையும், ரான் என்ற அவரது தாத்தாதான் வளர்த்துள்ளார்.

6 வயது முதல் அவருக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சியையும் அளித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிறிய பயிற்சி மையத்தில்தான் பைல்ஸ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த காலகட்டத்தில், அவரது திறமையைப் பார்த்து வியந்த, பிரபல ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரான அமீ போர்மான், அவருக்கு பயிற்சி அளிக்க முன்வந்தார். சைமன் பைல்ஸின் 8 வயது முதல் அமீ அவரது பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் விளையாட்டு வீராங்கனைகளிலேயே மிகவும் உயரம் குறைந்தவர் சைமன் பைல்ஸ். 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 555 அமெரிக்க வீரர்களின் குழுவில், மிகவும் குள்ளமானவராக இருந்த சைமன் பைல்ஸின் உயரம் 4 அடி 9 அங்குலம். ஆனால் உயரத்துக்கும், விளையாட்டு ஆற்றலுக்கும் தொடர்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், 2016 ஒலிம்பிக்கில் புயலாய் சுழன்றடித்தார் சைமன் பைல்ஸ். இந்த ஒலிம்பிக்கில் மட்டும் 4 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 5 பதக்கங்களை வென்றார். ஒலிம்பிக் பந்தயத்துடன் தனது வெற்றிப் பயணத்தை முடித்துக்கொள்ளாத சைமன் பைல்ஸ், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இதுவரை 19 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x