

சீன ஓபன் பாட்மிண்டன் போட் டியின் இறுதி ஆட்டத்தில் இந்தி யாவின் சாய்னா நெவால் தோல்வி யடைந்தார்.
சீனாவில் உள்ள புஸவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால், சீன வீராங்கனையான வீ ஜூருயியை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் சாய்னா நெவால் 12-21, 15-21 என்ற நேர் செட்டுகளில் தோல்வியடைந்தார்.
இப்போட்டி 39 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற வீ ஜூரூயிக்கு 7 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.