Published : 19 Nov 2015 09:01 AM
Last Updated : 19 Nov 2015 09:01 AM

ரஞ்சி கோப்பை போட்டி: தமிழகம் ஆட்டம் டிரா

ரஞ்சி கோப்பை போட்டியில் உத்தர பிரதேசம்-தமிழகம் இடையே யான ஆட்டம் கான்பூரில் நடை பெற்றது. முதல் இன்னிங்ஸில் உத்தர பிரதேசம் 348 ரன்களும், தமிழகம் 231 ரன்களும் எடுத்தன. 117 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய உத்தரபிரதேச அணி 62 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

ரெய்னா 145 ரன் விளாசினார். தமிழகம் தரப்பில் பாபா அபராஜித் 2 விக்கெட் கைப்பற்றினர். 391 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்தது. பாபா அபராஜித் 0, அபிநவ் முகுந்த் 3 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினர்.

இருவரும் தலா 71 ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். சங்கர் 0, இந்திரஜித் 21 ரன்னில் வெளியேறினர். தமிழக அணி 84 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்டநாயக னாக ரெய்னா தேர்வானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x