

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டிருந்தார். சென்னையில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸில் 106 ரன்கள் விளாசி, அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த அஸ்வின், அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின் போது 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனையும் நிகழ்த்தியிருந்தார்.
பிப்ரவரி மாதம் மட்டும் அஸ்வின் 24 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தத் தொடரில் அவர், ஒட்டுமொத்தமாக 32 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அஸ்வினின் உயர்மட்ட செயல் திறனானது இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றவும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவும் உதவியாக இருந்தது.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் அஸ்வின் பேட்டிங்கில் 176 ரன்கள் சேர்த்ததுடன் 24 விக்கெட்களையும் கைப்பற்றியதால் சிறந்த வீரராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.