Published : 09 Mar 2021 03:11 am

Updated : 09 Mar 2021 06:10 am

 

Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 06:10 AM

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்

bajrang-punia
பஜ்ரங் புனியா

ரோம்

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய விரரான விஷால் காளிரமணா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, மங்கோலியாவின் துல்கா துமூர் ஓச்சிரை எதிர்த்து மோதினார். இதில் 0-2 என பின்தங்கியிருந்த பஜ்ரங் ஆட்டம் முடிவடைய 30 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அபாரமாக செயல்பட்டு 2-2 என ஆட்டத்தை முடித்து தங்கப் பதக்கம் வென்றார்.


இந்தத் தொடரில் பஜ்ரங் கடந்த முறையும் தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா 14 புள்ளிகளை பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் பஜ்ரங் புனியா 2-வது இடத்தில் இருந்தார்.

70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் விஷால் காளிரமணா வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 5-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் சிர்பாஸ் தல்கட்டை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான நர்ஷிங் பஞ்சம் யாதவ் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் டானியார் கைசனோவிடம் தோல்வியடைந்தார்.

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடரை இந்தியா 3 தங்கம், 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று நிறைவு செய்தது. ஏற்கெனவே மகளிர் பிரிவில் வினேஷ் போகத் தங்கப் பதக்கமும், சரிதா மோர் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தனர். ஆடவர் பிரிவில் நீரஜ், குல்தீப் மாலிக், நவீன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தனர்.



பஜ்ரங் புனியாமேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்Bajrang punia

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x