

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்.
2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கப்பட்டபோது ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார் யூசுப் பதான். அந்தப் போட்டியில் ராஜஸ்தான் சாம்பியன் ஆனது. அந்த ஐபிஎல் போட்டியில் யூசுப் பதான் ராஜஸ்தானின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார்.
அதன்பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யூசுப் பதானை ஏலத்தில் வாங்கியது. 2012 மற்றும் 2014-ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இடம்பெற்றதன் மூலம் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.