Last Updated : 04 Mar, 2021 05:51 AM

 

Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

விளையாட்டாய் சில கதைகள்: மியான்தத் செய்த மிமிக்ரி

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த அணிகள் மோதினால் கேட்கவே வேண்டாம். ஆரம்பம் முதல் இறுதிவரை அனல் பறக்கும்.

1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியபோது அப்படி ஒரு சம்பவம் நடந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்த கட்டத்தில் பாகிஸ்தானை மீட்கும் முயற்சியில் மியான்தத் ஈடுபட்டிருந்தார். அவரது கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக, இந்திய கீப்பர் கிரன் மோரே, ஸ்டம்புக்கு பின்னால் நின்று பந்துவீச்சாளரிடம் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இது மியான்தத்தை கோபப்படுத்தியது. அப்போது டெண்டுல்கர் வீசிய ஒரு பந்து, மியான்தத்தின் பேட்டுக்கு நெருக்கமாக சென்று, கீப்பர் மோரேவின் கைகளைச் சென்றடைந்தது. பந்து பேட்டில் பட்டிருக்குமோ என்று சந்தேகப்பட்ட மோரே, துள்ளிக் குதித்து அம்பயரிடம் ‘அவுட்’ கேட்டார்.

ஆனால் அம்பயர் ‘அவுட்’ கொடுக்கவில்லை. மோரேவின் இந்தச் செயல் மியான்தத்தின் கோபத்தை அதிகரித்தது. மோரேவைப் பார்த்து சத்தம்போட, அவரும் பதிலுக்கு பேசியுள்ளார். மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், தவளைபோல் குதித்து மிமிக்ரி செய்து மோரேவை கிண்டலடித்தார் மியான்தத். பதிலுக்கு மோரே முறைக்க, இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் வந்தது. நடுவர் டேவிட் ஷெப்பேர்ட் தலையிட்டு இருவரையும் விலக்கினார். அதே நேரத்தில் மோரேவுடனான சண்டை மியான்தத்தின் கவனத்தை திசை திருப்ப, சில நிமிடங்களில் அவர் அவுட் ஆனார். இந்தியாவும் வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x