பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி

பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: மெக்ஸிகோ கிராண்ட்பிரியில் ரோஸ்பெர்க் வெற்றி
Updated on
1 min read

பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயத்தின் 17வது சுற்று மெக்ஸிகோவில் நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் ஹேமில்டன் 2 வது இடத்தை பிடித்தார். இந்த சீசனில் ரோஸ் பெர்க் பெற்ற 4வது வெற்றி இது வாகும். ஏற்கெனவே அவர் ஸ்பெயின், மொனாக்கோ, ஆஸ்தி ரியா போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தார்.

23 ஆண்டுகளுக்கு பிறகு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 போட்டியில் ரோஸ் பெர்க் வெற்றி பெற்றுள்ளார். அவர் 272 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளை கொண் டது.

இதில் 16வது சுற்று முடிவி லேயே இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் சாம்பியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 345 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 18வது சுற்று பிரேஸிலில் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in