

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் 13வது உலக வூசு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ஷனதோய் தேவி 52 கிலா எடைக்கு குறைவான பிரிவில் தென் கொரியாவின் ஹைபின் கிம்மை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு வீராங்கனையான பூஜா 75 கிலோ எடை பிரிவில் எகிப்தின் ஷெராவுக் மன்சூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஷனதோய் தேவி இறுதி போட்டியில் சீனாவின் லுன் ஹங்கை எதிர்கொள்கிறார். பூஜா, சீனாவின் யுவன் லீயுடன் மோதுகிறார். இந்த இரு ஆட்டங்களும் இன்று நடைபெறுகிறது.
இந்திய வீராங்கனைகள் இருவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் 2 வெள்ளி பதக்கங்கள் உறுதியாகி உள்ளது. ஷனதோய் தேவியும், பூஜாவும் 2011, 2013 போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரஜனி தியோரி காலிறுதியில் ரஷ்யாவின் அலி அப்துல் ஹலிகோவிடம் தோல்வியடைந்தார்.