Last Updated : 03 Mar, 2021 02:15 PM

 

Published : 03 Mar 2021 02:15 PM
Last Updated : 03 Mar 2021 02:15 PM

4-வது டெஸ்டில் இந்தியா தோற்றாலும் கவலையில்லை: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸி. தகுதி பெறாது? காரணம் என்ன

இந்திய அணி : கோப்புப்படம்

சிட்னி

அகமதாபாத்தில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள புகாரை விசாரிக்கச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) சம்மதித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின்படி, நியூஸிலாந்து அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இந்திய அணியும் தகுதி பெறும் கட்டத்தில் இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும்4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டும் அல்லது வெல்ல வேண்டும்.

இரண்டில் ஒன்று நடந்தாலும் இந்திய அணி பைனலுக்கு தகுதி பெறும். ஆனால்,இங்கிலாந்து அணி இந்திய அணியைத் தோற்கடித்தால், இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு பறிபோகும். அதேசமயம், ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றுவிடும்.

ஆனால், இப்போது ஆஸ்திரேலிய அணி பைனலுக்கு தகுதிபெறுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். கரோனாவைக் காரணம் காட்டி, தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட முடியாது எனக் கூறி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் தொடரை ரத்து செய்தது.

டெஸ்ட் தொடரை ரத்து செய்ததால், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு இழப்பீடும், டெஸ்ட் தொடரை திடீரென ரத்து செய்ததால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணிக்குப் புள்ளிகளைக் குறைக்க வேண்டும் எனக் கோரி ஐசிசி அமைப்பிடம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் புகார் தகுதியானது என்பதால், அந்தப் புகாரை விசாரிக்க ஐசிசி சம்மதித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வெளியிடும் தி சிட்னி ஹெரால்ட் நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது


தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை முன் அறிவிப்பின்றி ரத்து செய்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் அளித்துள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெறாது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பைனலுக்கு தகுதிபெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ஐசிசி நடவடிக்கை எடுத்தால், ஆஸி. அணிக்கு புள்ளிகள் குறைக்கப்படும்.

இந்த வார இறுதிக்குள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் பேசி சுமுகமான முடிவை ஆஸ்திரேலிய வாரியம் எடுக்கவேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது. இந்த கெடுவுக்குள் ஆஸ்திரேலிய வாரியம் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், ஐசிசி நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது" எனத் தெரிவித்துள்ளது.

மேலும் தெ ஆப்பிரிக்க வாரியத்தின் இந்தப் புகாரை ஐசிசி சுயமான விசாரணை அமைப்புக்கு மாற்றும். அந்த விசாரணை அமைப்புதான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய வாரியம் ரத்து செய்ய உரிமை இருக்கிறதா என்பதை முடிவு செய்யும். டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டதால், முழுமையாக 120 புள்ளிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கலாமா என்பதையும் இந்த விசாரணை அமைப்பு முடிவு செய்யும். இந்திய அணி 4-வது டெஸ்டில் தோல்வி அடைந்தாலும், பைனலுக்கு செல்ல முடியுமா என்பதையும் முடிவு இந்த குழு முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x