Last Updated : 03 Mar, 2021 03:21 AM

 

Published : 03 Mar 2021 03:21 AM
Last Updated : 03 Mar 2021 03:21 AM

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் வீரர்களை கலங்கவைக்கும் யோயோ டெஸ்ட்

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக மாறியுள்ளது ‘யோயோ டெஸ்ட்’. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமானால், ஒவ்வொரு வீரரும் இந்த சோதனையில் தேர்ச்சிபெற்று தாங்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக நிரூபிக்க வேண்டும்.

அது என்ன ‘யோயோ டெஸ்ட்’ என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம். சில மாதங்களுக்கு முன் தன்னைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பிரதமர் மோடியும் இக்கேள்வியைக் கேட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரான ஜென்ஸ் பாங்க்ஸ்போ என்பவர்தான் இந்த ‘யோயோ டெஸ்ட்’ சோதனை முறையை உருவாக்கினார். இதன்படி 20 மீட்டர்கள் இடைவெளியில் 2 கூம்புகள் வைக்கப்பட்டிருக்கும். பயிற்சியாளர் விசில் அடித்ததும், வீரர்கள் 2 கூம்புகளுக்கும் இடையே மாறி மாறி ஓடவேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வீரர்கள் இந்த தூரத்தை ஓடிக் கடக்காவிட்டால் அவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம் 15 விநாடிகளுக்குள் இந்த 2 கூம்புகளுக்கும் இடையே 2 கிலோமீட்டர்கள் தூரம் ஓடவேண்டும். மற்ற வீரர்கள் இதே தூரத்தை 8.30 நிமிடங்களில் கடக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்த யோயோ டெஸ்ட்டில் விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் திவாட்டியா, ஜெய்தேவ் உனட்கட், சித்தார்த் கவுல் ஆகியோர் இத்தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீண்டும் இந்த தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x