

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி வலுவான நிலையில் உள்ளது.
தமிழகம் மற்றும் ரயில்வே அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்களைக் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ரயில்வே ஆணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்திருந்தது. நேற்று காலையில் தங்கள் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் தமிழக அணியின் சார்பில் அஸ்வின் கிறிஸ்ட் 6 விக்கெட்களையும், கவுசிக் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி, நேற்று 4 விக்கெட் இழப் புக்கு 200 ரன்களை எடுத்திருந் தது. அந்த அணியின் செலுவ ராஜ் 80 ரன்களுடனும், ராவத் 77 ரன்களு டனும் ஆடிக்கொண்டிருந்தனர்