விளையாட்டாய் சில கதைகள்: உசேன் போல்ட்டின் அடுத்த லட்சியம்

விளையாட்டாய் சில கதைகள்: உசேன் போல்ட்டின் அடுத்த லட்சியம்
Updated on
1 min read

உசேன் போல்ட்டைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஜமைக்காவைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் 8 முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். ஓட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சில காலம் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்தினார். ஆஸ்திரேலியாவில் ‘சென்ட்ரல் கோஸ்ட் மரைன்ஸ்’ என்ற அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து சில காலம் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்திவந்த இவர், 2019-ம் ஆண்டில் அனைத்து விதமான விளையாட்டுகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு இசைத்துறையில் கால் பதித்துள்ளார்.

நஜென்ட் என்.ஜே.வாக்கர் என்ற தன் நண்பருடன் இணைந்து, ‘லிவிங் தி ட்ரீம்’ என்ற பாடலை வெளியிட்டுள்ள உசேன் போல்ட், இப்போது இத்துறையில் உலக அளவில் நம்பர் ஒன் ஆகும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்.

வானொலி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “தடகளத்தைப் போலவே இசையையும் நான் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளேன். கரோனா காலத்தின்போது ஒரு சிறந்த ஆல்பத்தை உருவாக்குவது பற்றி நண்பர்களுடன் ஆலோசித்து திட்டங்களை தீட்டியுள்ளேன். ஜமைக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெறும் வகையில் ஒரு இசை ஆல்பத்தை உருவாக்குவேன்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் விளையாட்டு உலகில் இருந்து ஓய்வுபெற்றாலும் அதை முற்றிலும் விட முடியாமல் இருக்கிறார் உசேன் போல்ட். சமீபத்தில் நண்பர்கள் சிலருடன் இணைந்து இவர் கிரிக்கெட் ஆடியது, சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதில் கிறிஸ் கெயிலைப் போலவே சில ஷாட்களை ஆடி அசத்தியுள்ளார் உசேன் போல்ட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in