Published : 05 Nov 2015 09:07 AM
Last Updated : 05 Nov 2015 09:07 AM

நடிகையை மணக்கிறார் யுவராஜ் சிங்

2011ல் இந்திய அணி உலககோப்பை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ்சிங் (33), இங்கிலாந்தை சேர்ந்த பிரபல மாடலும், நடிகையுமான ஹேசல் கீச்சை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

----------------------------------------

ஐஎஸ்எல்: கேரளா வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று கேரளா-புனே அணிகள் கொச்சியில் மோதின. 45வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் டக்னல் இந்த கோலை அடித்தார். 60வது நிமிடத்தில் கேரளா 2வது கோலை அடித்தது. டக்னலிடம் பந்தை பெற்ற சான்செஸ் வாட் அற்புதமாக கோல் அடித்தார். புனே அணியால் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கேரளா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

----------------------------------------

இங்கிலாந்துக்கு 284 ரன் இலக்கு

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் 355 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஹபீஸ் 151 ரன் விளாசினார். இதையடுத்து 284 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன் எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

----------------------------------------

பிரிஸ்பனில் இன்று முதல் டெஸ்ட்

ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் பிரிஸ்பனில், இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆடும் லெவனில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஹசல்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

----------------------------------------

இலங்கை அணிக்கு 225 ரன் இலக்கு

இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்று 2வது ஒருநாள் போட்டியில் மோதின. மழை காரணமாக 38 ஓவர்களாக நடத்தப்பட்ட ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் 37.4 ஓவரில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை அணிக்கு 38 ஓவரில் 225 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x