

2வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா கேப்டன் கம்பீர் மற்ற கேப்டன்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டார் என்று வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.
"அணியின் கேப்டன் அபாரமாக ஆடுவது என்பது ஒரு அணிக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும். கம்பீர் அணியை நன்றாக வழிநடத்திச் சென்றார். இந்த ஐபிஎல். கிரிக்கெட் தொடரில் சிறந்த கேப்டன் கம்பீரே" என்று கம்பீர் தலையில் பெரிய ஐஸைத் தூக்கி வைத்துள்ளார் வாசிம் அக்ரம்.
கின்ஸ் லெவன் அணி பேட்டிங் செய்தபோது 11வது ஓவர் முதல் 15வது ஓவர் வரை மற்ற கேப்டன்கள் ரன் கொடுக்காமல் பந்துகளை வீசுவதில் கவனம் செலுத்துவர். ஆனால் கம்பீர், தொடர்ந்து விக்கெட்டுகளை எடுக்க பவுலர்களை ஊக்குவித்து வந்தார். ஆக்ரோஷமான மனநிலை மற்றும் தன் வீரர்களிடத்திலிருந்த திறமைகளில் சிறந்ததை வெளிக்கொணர்ந்த வகையில் கம்பீர் இந்தத் தொடரில் சிறந்த கேப்டன்.
எங்கள் வேலை விஷயத்தை எளிமையாக வைத்திருத்தல், தேவைப்பட்டால் மட்டுமே கூடி பேசுவோம், அதுவும் நீண்ட கூட்டங்கள் கிடையாது, வீரர்களை அயற்சி அடையாமல் ரிலாக்ஸாக இருக்கச் செய்தோம். ஆகவே கேப்டனுக்கும் அணிக்குமே இந்தப் பெருமை போய் சேர வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம் அவ்வளவே.
இந்த முறை நாங்கள் மிக அமைதியான முறையில் ஆடினோம், ஒவ்வொருவரும் அடுத்தவரது வெற்றியில் பங்கு பெற்றுச் சாதக பாதகங்களை பகிர்ந்து கொண்டனர். இதுதான் இந்த அணியின் சிறப்பு" இவ்வாறு கூறினார் வாசிம் அக்ரம்.