சீன ஓபன் பாட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி

சீன ஓபன் பாட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி
Updated on
1 min read

சீனாவின் புஸவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், 11வது இடத்தில் உள்ள சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார். இதில் சாய்னா 22-20, 21-18 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 49 நிமிடங்களில் முடிவடைந்தது. சர்வதேச போட்டிகளில் சன் யுவை சாய்னா வீழ்த்துவது இது 5வது முறையாகும். மற்றொரு வீராங்கனையான பி.வி.சிந்து 21-14, 21-9 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் ஹெஸ்னியாவை வீழ்த்தி 2வது சுற்றில் நுழைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 12-21, 11-21 என்ற நேர்செட்டில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீனாவின் ஷென்லாங்கிடம் தோல்வியடைந்தார். காந்த் 12-21, 18-21 என்ற செட் கணக்கில் ஹாங் ஹாங்கின் ஹு யூனிடமும், பிரணாய் 14-21, 21-17, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் குவோ ஹாயிடமும் தோல்வியை சந்தித்து முதல் சுற்றுடன் வெளியேறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in