Last Updated : 25 Feb, 2021 03:14 AM

 

Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: விடைபெற்ற கிரிக்கெட் முன்னோடி

கிரிக்கெட் உலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தை எட்டி, எக்காலத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேன் என பெயர் பெற்றவரான டான் பிராட்மேன் காலமான தினம் இன்று (பிப்ரவரி 25). 2001-ம் ஆண்டில் காலமான அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

டான் பிராட்மேனுக்கு குடிப்பழக்கம் கிடையாது. மற்றவர்கள் குடிப்பதையும் விரும்ப மாட்டார். ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அக்காலத்தில் செல்வந்தர்கள் பணத்தை பரிசாக வழங்குவார்கள். பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசு வாங்கும் வீரர், தன் சகாக்களுக்கு மது வாங்கிக் கொடுப்பார். ஆனால் பிராட்மேன், யாருக்கும் மது வாங்கிக் கொடுத்ததில்லை. 52 டெஸ்ட் போட்டிகளில் 80 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்துள்ள பிராட்மேன், 29 சதங்களை விளாசியுள்ளார். இதன்படி மூன்றில் ஒரு இன்னிங்ஸில் அவர் சதம் அடித்துள்ளார். மொத்தம் 6,996 ரன்களைக் குவித்துள்ள டான் பிராட்மேனின் சராசரி ரன்கள் 99.94.

1936-ம் ஆண்டில் வெளியான ‘தி பிளையிங் டாக்டர்’ என்ற திரைப்படத்தில் டான் பிராட்மேன் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்த நிலையில் 1933-ம்ஆண்டில் நடுவர்களுக்கான (அம்பயர்) தேர்விலும் பிராட்மேன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ஒரு போட்டியில்கூட அவர் நடுவராக இருந்ததில்லை. இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் மீது டான் பிராட்மேன் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது 90-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சச்சின் டெண்டுல்கரை மட்டுமே அவர் அழைத்திருந்தார்.

ஒரு நல்ல இசைக் கலைஞராகவும் டான் பிராட்மேன் இருந்துள்ளார். பியானோ இசைக் கலைஞரான பிராட்மேன், ‘எவரிடே ஈஸ் எ ரெயின்போ டே ஃபார் மீ’ (Everyday is a Rainbow Day for Me) என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x