Published : 24 Feb 2021 01:16 PM
Last Updated : 24 Feb 2021 01:16 PM

'என்னை பாதிவழியில் விட்டுட்டு போறியே என தோனி கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது; தெரிந்திருந்தால் விளையாடியிருப்பேன்': மனம் திறந்த இசாந்த் சர்மா


என்னுடைய கடைசி டெஸ்டில் என்னை இப்படி பாதிவழியில் விட்டுவிட்டு போறிங்களே என தோனி கேட்டபோது நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். தோனியின் ஓய்வுஅறிவிப்பு தெரிந்திருந்தால் நான் விளையாடியிருப்பேன் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா தோனி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் இசாந்த் சர்மா தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். கபில்தேவுக்கு அடுத்தார்போல், வேகப்பந்துவீச்சாளர்களில் மைல்கல்லை எட்டப்போகும் வீரராகஇசாந்த் சர்மா இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக அஸ்வினுடன் யுடியூப்பில் கலகலப்பாக இசாந்த் சர்மா பேசியுள்ளார். அதில், இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் தோனியின் டெஸ்ட் போட்டி ஓய்வு குறித்து இசாந்த் சர்மா மனம் திறந்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

2014-ம் ஆண்டு ஆஸ்திேரலியாவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டபோதுதான் தோனி திடீரென ஓய்வு அறிவித்தார். அப்போது 2-0 என்ற தோல்வியுடன் இந்திய அணி இருந்தது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் யாரும் எதிர்பாராத சூழலில் மகேந்திர சிங் தோனி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து அணியில் உள்ள எந்த வீரருக்கும் முன்கூட்டியே ஏதும் தெரியாது. தோனியின் திடீர் ஓய்வு அறிவிப்பு ஒட்டுமொத்த வீரர்களையும் புரட்டிப்போட்டது. அந்த சம்பவத்தை இசாந்த் சர்மா பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது

தோனியின் ஓய்வு பற்றிபேசினாலே எனக்கு வேதனையாக இருக்கிறது. 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியப் பயணத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. அந்த தொடர் முழவுதும் எனக்கு கால் வலி கடுமையாக இருந்தது. அவ்வப்போது ஊசி போட்டுக்கொண்டுதான் விளையாடினேன். அதிலும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது என்னால் பந்துவீச முடியாத அளவுக்கு முழங்கால் வலி இருந்தது. இருந்தாலும் ஒவ்வொரு செஷனிலும் நான் ஊசிபோட்டுக்கொண்டுதான் பந்து வீசினேன்.

மகேந்திர சிங் தோனி(மகிபாய்) ஓய்வு பெறப்போகிறார் என்று அணியில் யாருக்குமே கடைசி நாள்வரை தெரியாது. எனக்கும் கூட தெரியாது. 4-வது நாளில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்துவிட்டார்கள்.
நான் தோனியிடம் சென்று என்னால் இதற்கு மேல் ஊசிபோட்டுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தேன்.

அதற்கு உடனே மகி பாய்(தோனி) என்னிடம் “பரவாயில்லை போதும். இப்போது நீ பந்துவீச வேண்டிய அவசியம் இல்லை” என்றார். “என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் நீ என்னை பாதிவழியில் விட்டுவிட்டு போறியே” என தோனி என்னிடம் தெரிவித்தார். “எனக்கு அப்போது ஏதும் புரியவில்லை. தோனி என்னிடம் இதுதான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி” என்று தெரிவி்த்தார்.

இதைக் கேட்டதும் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் திகைத்து நின்றோம். தோனியின் பேச்சைக் கேட்டவுடன் எனக்கும் அதிர்ச்சியாகஇருந்தது. “எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் நிச்சயம் அந்தப் போட்டியில் தொடர்ந்து பந்துவீசியிருப்பேன்.” அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. தோனி ஓய்வு அறிவிக்கும் கடைசி நாள்வரை எனக்கு தோனியின் அறிவிப்பு குறித்து எனக்குத் தெரியாது. தோனியின் ஓய்வு மிகவும் வருத்தமான தருணமாக அமைந்தது.

தோனி எப்போதுமே தனது ஸ்கோரைப் பற்றி பெரும்பாலும் கவலைப்பட்டதில்லை. அணியின் நலன், வெற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார். தோனி 100-வது டெஸ்ட் போட்டியை அப்போது நெருங்கிக்கொண்டிருந்தார்.

இருந்தாலும் டெஸ்ட் போட்டியில்தான் ஓய்வு பெற்றாரேத் தவிர அணியில் தோனி நீடித்தார். நாங்கள் இங்கிலாந்தில் இருந்தபோது, ஒருமுறை தோனி என்னிடம் கூறியது நன்றாக நினைவிருக்கிறது. தோனிக்கு 100 டெஸ்டில் விளையாடுவது முக்கியமல்ல. தனக்கு அடுத்தார்போல், விக்கெட் கீப்பர் ஒருவரை உருவாக்க வேண்டும் என எண்ணினார். விருதிமான் சாஹாவை நாம் வளர்க்க வேண்டியது அவசியம் என்றார். இதற்காக்ததான் தோனி திடீரென முடிவு எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

இவ்வாரு இசாந்த் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x