

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது தான்.
10 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னை 10 புள்ளிகளுடன் புள்ளி கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அரையிறுதிக்கு முன்னே றும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் இந்த ஆட்டம் மற்றும் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி யில் உள்ளது சென்னை அணி.
எஞ்சிய ஆட்டங்களில் சென்னை அணி 24ம் தேதி டெல்லியையும், டிச.1ம் தேதி மும்பையையும், 5ம் தேதி புனேவையும் சந்திக்கிறது. கேரள அணியின் நிலைமையும் இதேபோன்று தான் உள்ளது. அந்த அணி 10 ஆட்டங்களில் பங்கேற்று 11 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.