

19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.
ரவுண்ட் ராபின் முறையில் நடை பெறும் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 29ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
இந்த தொடர் இந்திய அணியின் பலம், பலவீனங்களை அறியும் விதமாக இருக்கும். இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா சால்ட்லேக்கில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கு ஆயத்த மாகும் விதமாக இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் முன்னிலையில் கடந்த சில நாட் களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட னர். இந்திய அணி ரிக்கி புயி தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணி 2வது ஆட்டத்தில் 21ம் தேதி ஆப்கானிஸ்தானையும், 24ம் தேதி வங்கதேசத்தையும், 27ம் தேதி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.