நாக்பூர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்காவின் 9 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி- அஸ்வின் சாதனை

நாக்பூர் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்காவின் 9 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி- அஸ்வின் சாதனை
Updated on
1 min read

2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

*

அஸ்வின் 66 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தினார். இது அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு முன்னர் ஆஸி.க்கு எதிராக 103 ரன்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

*

அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 15வது முறையாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரே லியாவின் கிளாரி கிரிம்மெட்டின் சாதனையை சமன் செய்தார். அவர் 31 டெஸ்டில் 15 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

*

அஸ்வின் 31 டெஸ்டில் 169 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர்களில் 31 டெஸ்டில் கிரிம் மெட் 164 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

*

அஸ்வின் இந்த ஆண்டில் 55 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட விக்கெட் வீழ்த்தும் 12வது இந்திய வீரர் இவர் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in