Published : 19 Feb 2021 02:17 PM
Last Updated : 19 Feb 2021 02:17 PM

ஐபிஎல் ஏலத்தில் அதிகம் வாங்கப்படாத மே.இ.தீவுகள், இலங்கை வீரர்கள்: காரணம் என்ன? கலக்கப்போகும் ஆப்கன் மும்மூர்த்திகள்

கோப்புப்படம்

சென்னை


சென்னையில் நடந்த முடிந்த 14வது ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை சார்பில் அதிகமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது.

ஐபிஎல் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளின் டி20 போட்டிகள் என்றாலே மே.இ.தீவுகள் வீரர்களி்ன் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. தங்கள் சொந்த நாட்டு அணிக்கு உயிரைக் கொடுத்து விளையாடுவதைவிட, இதுபோன்ற லீக் போட்டிகளில் அணிகளுக்குத்தான் அதிகமான ஈடுபாடுகாட்டுவதால், மே.இ.தீவுகள் வீரர்களை ஆர்வத்துடன் பல அணிகளும் வாங்குவார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு ஐபிஎல் வரை மே.இ.தீவுகள் வீரர்கள் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்ட ஐபிஎல் ஏலம் இந்த ஆண்டு மே.இ.தீவுகள் வீரர்கள் மட்டுமல்லாமல் இலங்கை வீரர்களின் பங்களிப்பும் இல்லாமல் போனது.

நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் வாங்கப்பட்டனர்.

ஐபிஎல் அணிகளில் ஏற்கெனவே கெயில், ஆன்ட்ரூ ரஸல், சுனில் நரேன், கெய்ரன் பொலார்ட், ஹோல்டர், பிராவோ உள்பட பல வீரர்கள் இருந்தபோதிலும் புதிதாக ஏலத்தில் மே.இ.தீவுகள் சார்பில் ஆலன் மட்டுமே வாங்கப்பட்டார். அதேசமயம், ஷெல்டன் காட்ரெல், ஓஸ்னே தாமஸ், லீவிஸ், ரோவ்மன் பாவெல் ஆகியோர் இருந்தும் வாங்கப்படவில்லை.

இலங்கை அணி சார்பில் ஒரு வீரர் கூட ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது பெரும் வியப்புக்குரியதான.

என்ன காரணம்
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பெரும்பாலும் ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகியோருக்குதான அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இருதுறைகளிலும் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் என மே.இ.தீவுகள் அணியிலும், இலங்கையிலும் மிகக் குறைவாகும். இதனால்தான். மே.இ.தீவுகளில் இருந்து ஒருவரும், இலங்கையில் இருந்து எந்தவீரரும் தேர்வு செய்யப்படவில்லை. அதிலும் சல்யூட் மன்னன் காட்ரெல் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்தார், பந்துவீச்சும் எதிர்பார்த்தஅளவுக்கு இல்லை தொடக்க ஆட்டக்காரர் லீவிஸ் ஃபார்மில் இல்லை என்பதால் வாய்ப்பு இல்லை.

கலக்கப்போகும் மும்மூர்த்திகள்

ஆப்கானிஸ்தான் அணி சர்வதேசஅளவில் சிறப்பாகச் செயல்படுவதற்கு அந்த அணியில் உள்ள ரஷித்கான், முகமது நபி, முஜிப் உர் ரஹ்மான்மூவரும் முக்கியக் காரணம். இதில் 3 பேரும் ஓரளவுக்கு பேட்டிங் செய்து, அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

இந்த 3 பேரையுமே சன்ரைசர்ஸ் அணி இந்த முறை விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால், 3 பேரையும் ஒரே நேரத்தில் களமிறக்குவது சிரமம் என்றாலும், 3 பேரும் நிச்சயம் ஐபிஎல் தொடரை கலக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புஇருக்கிறது.

ஏற்கெனவே கேப்டன் டேவிட் வார்னர், கேன் வில்லியம்ஸன், ஹோல்டர் ஆகியோருக்கு கண்டிப்பாக அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதால், கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரர் மட்டுமே இடம் பெற முடியும்.

அந்த வகையில் ரஷித் கான், முஜிப், நபி ஆகியோருக்கு சுழற்ச்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படலாம். மூவருமேசுழற்பந்துவீச்சில் தனிமுத்திரை பதிக்கக்கூடியவர்கள். அதிலும் இந்திய ஆடுகளங்கள் மூவரின் பந்துவீச்சுக்கும் நன்கு ஒத்துழைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x