Published : 18 Feb 2021 06:53 PM
Last Updated : 18 Feb 2021 06:53 PM

நியூஸி. ஆல்ரவுண்டருக்கு ரூ.15 கோடி: கொத்திச் சென்றது ஆர்சிபி: புஜாராவுக்கு வாழ்வு கொடுத்த சிஎஸ்கே: 7 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தடம்


சென்னையில் நடந்துவரும் 14-வதுஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கெயில் ஜேமிஸனை ரூ.15 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது ஆர்சிபிஅணி.

அதேநேரத்தில் ஒவ்வொரு ஐபிஎல் போட்டியிலும் புஜாரா இடம் பெறுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.50- லட்சம் அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளன.

இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். 61 இடங்களுக்கு 292 வீரர்கள் ஏலத்தில் போட்டியிடுகின்றனர்.

நியூஸிலாந்து டெஸ்ட் அணியின் ஆல்ரவுண்டர் கையில் ஜேமிஸனுக்கு ரூ.75லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் சிறந்த பங்களிப்புகளைபேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அளித்துள்ள ஜேமிஸுக்கு நல்ல வரவேற்பு ஏலத்தில் இருந்தது.

ஆர்சிபி அணியும், டெல்லி அணியும் ஜேமிஸனை ஏலத்தில் எடுக்க கடும் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் ஜேமினுக்கு ரூ.10 கோடி கொடுக்கவும் ஆர்சிபி அணி தயாராக இருந்தது. ஆனாலும் டெல்லி அணி தொடர்ந்து ஏலத்தில் நீடித்ததால், ரூ.15 கோடிக்கு ஜேமிஸனை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.

இந்திய டெஸ்ட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் சத்தேஸ்வர் புஜாரா ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அவரை அதே விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது. கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக ஐபிஎல் போட்டியில் புஜாராக விளையாடியிருந்தார். அதன்பின் 7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, மஞ்சள் ஆடையை அணிய உள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டாம் கரனை ரூ.5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ்அணி விலைக்கு வாங்கியது. ஒரு.1.50 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.5.25 கோடிக்கு டாம் கரன் விலைபோயுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரராக வலம் வருபவரான லாபுஷேன் ரூ.ஒரு கோடி அடிப்படை விலையில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் எந்த அணியும் வாங்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x