ஸ்காட்டிஸ் ஓபன் பாட்மிண்டனில் பவார் தோல்வி

ஸ்காட்டிஸ் ஓபன் பாட்மிண்டனில் பவார் தோல்வி
Updated on
1 min read

ஸ்காட்டிஸ் ஓபன் பாட்மிண்டனின் காலிறுதியில் இந்தியாவின் ஆனந்த் பவார் தோல்வியடைந்தார்.

ஸ்காட்டிஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆனந்த் பவார் 21-12, 10-21, 13-21 என்ற செட் கணக்கில் நம்பர் ஒன் வீரரான டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்ஹஸிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

இரட்டையர் பிரிவில் இந்தியா வின் மனு அட்ரி-சுமித் ரெட்டி ஜோடி 17-21, 15-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ எலிஸ்-பீட்டர் மில்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டம் 32 நிமிடங்களில் முடிவடைந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in