

உலக ஸ்குவாஸ் சாம்பியன்ஷிப் போட்டி வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சவுரவ் கோஷல் 7-11, 11-8, 11-7, 11-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரயான் ஹஸ்க்லியை தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நடைபெற்றது. சவுரவ் கோஷல் தனது அடுத்த சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜேம்ஸ் வில்ஸ்டிராப்பை எதிர்கொள்கிறார்.
மற்ற ஆட்டங்களில் ஹரிந்தர் பால் சந்து, மகேஷ் மங்கோன்கர் முதல் சுற்றில் தோல்வியை சந்தித் தனர்.